சேலம், எடப்பாடி நகர் புறப்பகுதியில் திடீர் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து மிதமான வெயில் அடித்து வந்தநிலையில் மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைதொடர்ந்து திடீரென மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.