தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை, மேட்டூர் ெதாகுதி எம். எல். ஏ. சதாசிவம் நேரில் சந்தித்து தொகுதி வளர்ச்சி குறித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: -
மேட்டூர் சட்டசபை தொகுதியில் வாழும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டா இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். மேச்சேரியை புதிய தாலுகாவாக பிரிக்க வேண்டும். மேச்சேரி போலீஸ் நிலையத்தில் நிர்வாக வசதிக்காக காமனேரியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் பள்ளிப்பட்டி மல்லிகுந்தம் கூனாண்டியூர் கோனூர் ஊராட்சிகளை ஒருங்கிணைந்து தனிக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.