தமிழக-கர்நாடக எல்லை பகுதியான அடிபாலாற்றில் தமிழக அரசு சார்பில் வனத்துறை மற்றும் காவல் துறை சோதனைசாவடி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான இடத்தை சதாசிவம் எம். எல். ஏ. அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மரியமுத்து, மேட்டூர் மற்றும் சென்னம்பட்டி வனத்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் மின்வாரிய
அதிகாரிகள், பா. ம. க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.
பின்னர் சதாசிவம் எம். எல். ஏ. கூறுகையில், தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான அடிப்பாலாறில் சோதனை சாவடி அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கு கட்டி டம் அமைக்க ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. காவல் துறை சோதனைச்சாவடி அமைப்பதற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப் படும். இந்த பகுதி வருவாய்த்துறை சேலம் மாவட்டத்திற்கு உட்பட்டது. வனத்துறைக்கு ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு உட்பட்டது. ஏற்கனவே இந்த பகுதி அனைத்தும் மேட்டூர் வனச்சரகத்திற்கு உட்பட்டு இருந் தது. இதனை மீண்டும் மேட்டூர் வனச்சரகத்திற்கு சேர்க்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் என்று கூறினார்.