சேலம்: கொலை செய்து திருட்டு - 7 பேருக்கு ஆயுள் தண்டனை

7495பார்த்தது
கருமலை கூடல் குஞ்சாண்டியூர் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன். இவரது மனைவி பழனியம்மாள். இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர். நடராஜன் வீட்டில் பழங்கால இருடியம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக நங்கவள்ளியை சேர்ந்த நாகப்பன் மற்றும் பெரியசாமி ஆகியோர் நடராஜனிடம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தரகர் மூலம் வந்ததாக ராஜா, ரகு, பாபு, வினோத்குமார், சரண்னு, ராமச்சந்திரப்பா மற்றும் நன்சி கௌடா என ஏழு பேர் அத்து மீறி நடராஜன் வீட்டுக்குள் புகுந்து பழனியம்மாள் கைகளை கட்டி கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கசெயினை பறித்தனர். மேலும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜனை கட்டிப்போட்டு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த இருடியத்தை திருடி சென்றனர்.

இது குறித்து கருமலை கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்த ஏழு பேரையும் கடந்த 29.6.2016ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி