மேச்சேரி அருகே பொட்டனேரி ஜே. எஸ். டபிள்யூ. ஸ்டீல் நிறுவ னம் சார்பில் 'சாலை பாதுகாப்பு நாயகனாக இருங்கள்' என்ற தலைப்பில் தொழிற்சாலையில் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுடன் மேச்சேரி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங் களின் மாணவர்களை இணைத்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தின. 500-க்கும் மேற்பட் டோர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு சாலை பாது காப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்தனர். தொழிற்சாலை துணை தலைவர் குமார் தலைமை தாங்கி னார். தொழிற்சாலையின் மனித வளத்துறை தலைவர் அரி ராஜ். பாதுகாப்பு துறை தலைவர் சுரேஷ், சி. எஸ். ஆர். துறை அதிகாரி பாரதி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதில் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் ராமன், மேச்சேரி தி காவிரி கல்வி நிறுவனங்களின் மூத்த தலைவர்கள் இளங்கோவன், சண்முகநாதன், நங்கவள்ளி தீய ணைப்பு நிலைய அலுவலர் சரவணன், முதல்வர் நந்தகுமார், மேட்டூர் அரசு ஐ. டி. ஐ. முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.