மேட்டூர் புதிய அனல் மின்நிலையம் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இந்த அனல் மின் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த மின் நிலையத்தில் நடைபெற்று வந்த மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக பழுது சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று (ஜன.9) மதியம் முதல் இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. நேற்று இரவு முதல் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியது.