சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. இதில் புதிய அனல் மின் நிலையத்தின் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த மின்நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.