சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சாத்தப்பாடியில் பாலமுருகன் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரியில் மாணவிகள், ஆசிரியைகள் இணைந்து புதுபானையில் பொங்கல் வைத்து கரும்பு, தேங்காய், பழங்கள் வைத்து வழிபாடு நடத்தியதுடன் பொங்கல் கொண்டாடினர்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பாலமுருகன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஆண்டியப்பன், கல்லூரி முதல்வர் இந்துமதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.