மேட்டூர் அணையில் படகு பராமரிப்பு பணிக்கு புதிய வின்ச்.

61பார்த்தது
மேட்டூர் அணையில் நீர்வளத் துறைக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் உள்ளது. இரண்டு சிறிய படகும், ஒரு பெரிய படகும் உள்ளது. அணையின் பராமரிப்பு பணி மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். விசைப்படகுகளில் ஏற்படும் பழுது நீக்குவதற்காக அணையில் 3. 5 டன் எடை கொண்ட வின்ச் உள்ளது. இந்த விஞ்ச் மூலம் சிறிய படகுகளை இழுக்கும் திறன் கொண்டது. தற்போது பழைய வின்ச் பழுதடைந்ததால் படகுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனை அடுத்து புதிதாக செய்யப்பட்ட 8 டன் எடை கொண்ட வின்ச் இன்று லாரி மூலம் மேட்டூர் அணையின் இடது கரைக்கு கொண்டுவரப்பட்டு விஞ்சு பொருத்தம் பணி நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி