நங்கவள்ளி; தெருநாய் கடித்து ஒரு பெண் உள்பட 6 பேர் காயம்!

68பார்த்தது
நங்கவள்ளி; தெருநாய் கடித்து ஒரு பெண் உள்பட 6 பேர் காயம்!
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில். இறைச்சி கடைகளில் இருந்து வீசப்படும் எலும்புகளை தின்பதற்காக ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இவைகள் அடிக்கடி சாலையில் சண்டையிட்டு சாலையில் செல்வோரை துரத்திச்சென்று கடிப்பதுடன், சாலையில் குறுக்கே சுற்றித் திரிவதால் விபத்தில் பலர் சிக்கி காயமடைகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாங்கவள்ளி, சப்பாணிப்பட்டியில் உள்ள தங்கமணி (55) என்ற பெண்ணையும், இதேபோல் சின்னையன் (72), வெங்கடாஜலம் (70), அங்கப்பன்(75), காசிகவுண்டர்(55), இளையபாரதி (17) ஆகியோரையும் தெருநாய்கள் கடித்துக் குதறியது.
தெருநாய் கடித்து கை, கால்களில் காயம் அடைந்த ஆறு பேரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி