மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சதாசிவம் மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்று இன்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு செய்தால் மழைக்காலங்களில் அதிக நீரை அணையில் சேமிக்க முடியும் என்றும் அந்த தூர்வாரும் மண்ணினை விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.