மேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கியிருந்த அரசர் காலத்து கல்கோட்டை நீருக்கு வெளியே தென்பட்டது.
மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் ஆண்டு வந்த அரசர்கள் பல்வேறு கோயில்களை கட்டி வழிபாடு நடத்தி வந்தனர். நீர் தேக்க பகுதிகளான பண்ணவாடி, கோட்டையூர், கோவிந்தபாடி, சாம்பள்ளி கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்தனர். மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டதால் அங்கிருந்த கிராம மக்கள் வேறு பகுதிக்கு குடியமர்த்தப்பட்டனர் மேலும் அவர்கள் வழிபாடு நடத்தி வந்த கோயில்கள் அப்படியே விட்டு சென்றனர். மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும்போது பண்ணமாடி நீர்த்தேக்க பகுதியில் மூழ்கியிருந்த நந்தி சிலை, ஜலகண்டேஸ்வரர் ஆலயம் வெளியே தெரிய தொடங்கும்.
இந்நிலையில் தற்போது நீர்மட்டம் 31 அடியாக சரிந்ததால் கோட்டியூர் நீர் தேக்க பகுதியில் மூழ்கியிருந்த அரசர் காலத்து கல் கோட்டை வெளியே தென்பட்டது. இந்த கல்கோட்டையானது நூறு ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த அரசர்கள் கல்கோட்டை கட்டி ஆண்டு வந்ததாக வரலாற்று நிபுனர்கள் தெரிவித்தனர். நீர்மட்டம் 20 அடிக்கு கீழ் சாதியும் போது கால் கோட்டை முழுவதும் வெளியே தெரியும். இந்நிலையில் கல் கோட்டையை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.