மேட்டூர் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா.

81பார்த்தது
மேட்டூர் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா.
சேலம் மாவட்டம் , மேட்டூரில்  அதிமுக சார்பில்  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பெருவிழா நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு
மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கிறித்துவ மத பங்குதந்தையர் மற்றும் மத போதகர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
பாடல் குழுவினரால் கிறிஸ்மஸ் பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
சிறுவர் சிறுமியர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
 பாடல் குழுவினர் மற்றும் நடனமாடிய சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கு தந்தை மற்றும் மத போதகர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந் நிகழ்ச்சியில்
மேட்டூர் புனித மரியன்னை ஆலய பங்கு தந்தையர்கள், திருத்தொண்டார்கள், சி. ஐ. ஜி, மற்றும் சி. எஸ். ஐ, மத போதகர்கள், சேலம் புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை உள்ளிட்ட நூற்றுக்கும்  மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் இரவு  உணவு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி