சேலம் மாவட்டம் மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்து தொடங்கிய விநாயகர் தேரும், பெரிய தேரும் மேற்குறத் வீதி கிராமச் சாவடி அருகில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை திரளான பக்தர்கள் வடம் பிடித்து விநாயகர் தேர், பெரிய தேரை இழுத்தனர்.
விநாயகர் தேரும், பெரிய தேரும் கோவிலின் முன்பு நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு சத்தாபரணம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் தாய் வீடான பொங்கபாலியில் இருந்து வாணவேடிக்கையுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.