காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று வினாடிக்கு 1, 549 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1, 225 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1, 500 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. நேற்று 103. 91 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 103. 87 அடியாக சரிந்தது.