சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூர் கரிகாலன் நகர் எஸ். எம். மகாலில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் முகாமில் மெட்ராஸ் என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் மைய ரெக்கார்ட்ஸ் அதிகாரி கர்னல் உன்னிகிருஷ்ணன் கலந்து கொண்டு முன்னாள் படைவீரர்களின் குறைகளை கேட்கிறார்.
இதில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு அனைத்து குறைகளையும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று முன்னாள் முப்படை வீரர்கள் சமூக சேவை அறக்கட்டளை செயலாளர் வெள்ளிங்கிரி ஈசன் தெரிவித்துள்ளார்.