மேட்டூர் காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்ற கோரிக்கை.

1560பார்த்தது
மேட்டூர் அணையின் அடிவாரம் காவிரியாற்றில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
அணையின் அடிவாரம் காவிரி படித்துறையில் புரோகிதர்களை கொண்டு ஹோமம் வளர்த்து பின்டங்களை நீரில் கரைத்து, புனித நீராடி பின்னர் அவர்கள் பயன்படுத்திய ஆடைகள், பிளாஸ்டிக் , மாலை, பூஜை பொருட்கள், பாலிதீன் குப்பைகளை அப்படியே  ஆற்றில் விட்டு செல்கின்றனர். தற்போது காவிரி
ஆற்றில் நீர் திறப்பு வினாடிக்கு 2, 100 கனஅடியாக உள்ளதால் பொதுமக்கள் விட்டுச்சென்ற பொருட்கள்  கரை ஒதுங்கி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு  குடிநீர் நீரேற்று நிலையம் மூலம்
பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது இதனால் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீர் அசுத்தமடைந்து காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பொதுமக்கள் விட்டுச் சென்றுள்ள குப்பைகளால் தண்ணீர் துர்நாற்றம் வீசி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை  அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி