நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தொடர்ச்சியாக ஆக்ஸிஜன் விநியோகம், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக பொது மருத்துவத் துறையில் 50-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா என்பது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது இருப்பினும், நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கின்றன.
இந்த பாதிப்புகளுக்கு மூன்று முதல் நான்கு நாட்களில் குணமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் பொது இடங்களில் கூட்ட நெரிசில் உள்ள இடங்களில் செல்லும் பொழுது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் தொடர்ச்சியாக சளி காய்ச்சல் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கூறிய சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.