சேலம் கிழக்கு மாவட்ட பாஜக. , சார்பில் மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு, பாஜக பட்ஜெட் விளக்க, மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், மாநிலத் துணைத் தலைவர் இராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அயோத்தி ராமச்சந்திரன், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.