உலக மார்பக புற்றுநோய் மாதமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை யொட்டி விநாயகா மிஷனின் விம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது கதிரியக்க பிரிவின் மூலம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தியது.
துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக் கான கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். பெண்களின் ஆரோக்கியத்துக்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் முக்கியத்துவம் என்பதை வலியுறுத்தும் வகை யில் பெண்களுக்கு கபடி போட்டியும், மாணவர்களின் விழிப்பு ணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டது.