மேட்டூர், ஓமலூர் சட்டசபை தொகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளிலும், சேலம் மேற்கு மாவட்ட பசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த வகையில் காமனேரி, எம். காளிப்பட்டி, செக்கான் ஏரி, கொளத்தூர் சுரக்காய்பட்டி ஏரி, ஆற்காடு ஏரி, மதுர காளியம்மன் ஏரி ஆகிய ஏரிகளில் நீர்நிலைகளில் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் முத்துகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் சிவக்குமார், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபாபதி, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பசுமை தாயகம் மாநில இணை பொது செயலாளர் சத்ரியசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.