சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் எழுத்தராக பணியாற்றி வந்தவர் கலைவாணன். இவர் கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கி செயல்பட்டார். இதனிடையே கலைவாணன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றம் சார்பில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. இதில் அனைத்து
அரசியல் கட்சி நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள், பரம்பரை கட்டளைதாரர்கள், அன்னபூரணி அன்னதான அறக்கட்டளை குழுவினர், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற எழுத்தர் கலைவாணனின் பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.