மேட்டூரில் அரசு பேருந்து மீது ரசாயன பாரம் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில் பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து ஆண்டிக்கரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்போது ராமன் நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக நின்றபோது வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் இருந்து பெருந்துறை சிப்காட்டிறக்கு ரசாயன திரவம் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு சில பெண்களுக்கு லேசான காயங்களுடன் அனைவரும் உயிர்த்தபினார்கள். லாரி ஓட்டுநர் இடிபாடுகள் சிக்கியதால் அப்பகுதி இளைஞர்கள் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலமாக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக மேட்டூர் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக
போக்குவரத்து பாதித்தது.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருமலைக்கூடல் காவல்துறையினர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர்.