லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்

1570பார்த்தது
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் படுகாயம்
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி பகுதியை சேர்த்தவர் ராஜா. இவரது மகன் மாதேஷ் (23). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மாதேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மின் விளக்கை ஒளிர விடாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி