சேலம் மாவட்டம் ஆத்தூர், விநாயகபுரம். உடையார்பாளையம், கல்லாநத்தம், முல்லைவாடி, நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஆறு மணி முதல் பலத்த மழை பெய்தது. கனமழையால் அப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.