தீர்த்தக்குடம் ஊர்வலம்: நாளை கும்பாபிஷேகம்

78பார்த்தது
தீர்த்தக்குடம் ஊர்வலம்: நாளை கும்பாபிஷேகம்
சங்ககிரி சவுந்தரநாயகி உடனுறை சோமேஸ் வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பவானிகூடுதுறையில் இருந்து ஆயிரக்கணக் கான பக்தர்கள் மஞ்சள், சிவப்பு நிற உடை அணிந்து காவேரியில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சங்ககிரி ஆய்வு மாளிகையில் இருந்து ஊர்வலமாக யானை, குதிரைகள், காளை மாடுகளுடன்செண்டை மேளம், நையாண்டி மேளங்களு டன் முன்னால் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி தீர்த்த குடத்துடன் ஊர் வலமாக டி. பி. ரோடு, பவானி மெயின்ரோடு, பழைய பஸ் நிலையம், புதிய எடப்பாடி ரோடு சந்தை பேட்டை வழியாக கோவில் வளாகத்தை சென்று அடைந்தது.

இன்று காலை 9 மணி அளவில் 2-ம் கால வேள்வியும், ஆராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு 3-ம் கால வேள்வி நடக்கிறது. 12-ந் தேதி அதிகைால 5 மணி அளவில் 4-ம் கால வேள்வியும், 8. 30 மணி முதல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு அரசு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, டி. எம். செல்வகணபதி எம். பி. , நாமக்கல் எம். பி. வி. எஸ். மாதேஸ்வ ரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி