தலைவாசல் ஒன்றிய குழு கூட்டம்

81பார்த்தது
தலைவாசல் ஒன்றிய குழு கூட்டம்
தலைவாசல் ஒன்றிய குழு கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கி னார். துணை தலைவர் அஞ்சலை, வட்டார வளர்ச்சி அலுவ லர் (ஊராட்சிகள்) செந்தில், ஒன்றிய ஆணையாளர் வெங்க டேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாள ராக மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். தலைவாசல் ஒன்றியத்தில் பல்வேறு பணிகள் நடை பெற்று வருகிறது. பணிகளை முடித்துக் கொடுக்கின்ற ஒப்பந் ததாரர்களுக்கு பில் வழங்குவதில் காலதாமதம் செய்யும் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பில் வழங்குவ தில் காலதாமதம் செய்யக்கூடாது எனவும் தி. மு. க. மற்றும் அ. தி. மு. க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்து பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் கூறும்போது பில் வழங்குவதில் காலதாமதம் இல்லாமல் செய்து தர நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து கூட்டத்தில் பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி