சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராசிபுரம் பிரிவு சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருவரங்கநாதர் பெருமாள் கோயில் வைகுண்டஏகாதசி முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இன்று அதிகாலை கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு கோ பூஜை நடைபெற்ற நிலையில் மூலவர் சிறப்பு பூஜைகள் மஹா தீபாராதனை நடைபெற்றது பின்னர் உற்சவருக்கு அபிஷோகம் நடைபெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை பின்னர் காலை 5 மணிக்கு சொர்க வாசல் திறக்கப்பட்டு சொர்க்கவாசல் வழியாக சர்வ அலங்காரத்தில் அருள்மிகு ஸ்ரீ திருவரங்கநாதர் பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, சமேதராக பல்லக்கில் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கும் தீபாரதனை நடைபெற்றது, அதிகாலை முதலே
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்,