சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தம்மம்பட்டியில் பழமையான காசி விசுவநாதர் திருக்கோவில் உள்ளது. சுவேத நதிக்கரையோரம் அமைந்துள்ள திருக்கோவிலில் பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். வைகாசி மாத பௌர்ணமியை ஒட்டி கோவில் படித்துறையில் சுவேத ஆராத்தி பூஜை நடைபெற்றது. பவுர்ணமி நிலவுக்கும் நிலவு ஒளியில் வேத நதிக்கும் பூஜை செய்து பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்வாறு செய்வதன் மூலம் ஊரின் நீர் ஆதாரம் நல்ல நிலையில் இருக்கும் என்பது ஐதீகம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிகழ்வில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி உலிபுரம், ஜங்கமசமுத்திரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.