சேலம் சிவதாபுரம் பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

73பார்த்தது
சேலம் சிவதாபுரம் பகுதியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்
சேலம் அருகேயுள்ள சிவதாபுரம் சித்தர் கோயில் மெயின் ரோடு பகுதியில் மலங்காட்டான் தெரு என்ற பகுதி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர்
வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பொது மக்கள் சித்தர் கோயில் மெயின் ரோட்டில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி