சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா, நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று தங்க கவசத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்க கவசத்தில் ஜொலித்த சிவபெருமானை வழிபட்டு சென்றனர். மேலும், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.