கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி நீக்கம்

52பார்த்தது
கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி நீக்கம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்தவர் பிரியா. இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆத்தூர் கோட்டாசியர் ரமேஷ் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் 11 கவுன்சிலர்களில் 9 பேர் பிரியாவுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நம்பிக்கை இல்லா தீர்மான கோப்புகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பிரியாவின் ஒன்றிய தலைவர் பதவியை பறித்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஒன் றிய துணைத்தலைவர் விஜேந்திரன் தற்காலிகமாக ஒன்றிய தலைவர் பொறுப்பு வகிப்பார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி