பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு

453பார்த்தது
பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய நூலகம் திறப்பு
பேளூரில் சிறந்த கட்டமைப்பு, சுகாதார வசதிகளுடன் பயனாளிகள் வரவேற்பு அறை, தாமரைக்குளம், மூலிகைத் தோட்டத்துடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. மேலும் தேசிய தரச் சான்றிதழ் பெற்றதோடு மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்தது. இதையொட்டி மத்திய அரசு ரூ. 15 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியது. புதிய நூலகம்இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முயற்சியால் வாழப்பாடி அரிமா சங்கத்துடன் இணைந்து சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 1000 அரிய நூல்களை கொண்ட புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் தமிழ்மணி நூலகத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், டாக்டர் மோதிலால், தேவராஜன் மண்டல தலைவர் பாபு, வட்டார தலைவர் ஜவஹர், கந்தசாமி, கலைஞல் புகழ் பன்னீர்செல்வன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக நோயாளிகள், உடனாளர்கள் அமர்ந்து படிப்பதற்கு உதவிடும் நோக்கில் பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நூலகம் திறக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி