கெங்கவல்லி மாரியம்மன் கோயில் அலகு குத்துதல்

1291பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில்ஆதிசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 28ஆம் தேதி காப்பு கட்டுதலோடு திருவிழா தொடங்கிய நிலையில்அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்று வந்தது. விழாவில் அலகு குத்துதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அக்கரை மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டுதல் தொடங்கி அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அலகுகள் குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.