தலைவாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
தலைவாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு கட்சியின் தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு, சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாணவரணி செயலாளர் தினேஷ், தலைவாசல் வேல்முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி