இளம்பெண் மானபங்கம்; கல்லூரி மாணவர் கைது

72பார்த்தது
இளம்பெண் மானபங்கம்; கல்லூரி மாணவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மரிய விஷ்வா (வயது 19), கல்லூரி மாணவர். இவர், சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் மரிய விஷ்வாவை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி