கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேர் கைது

68பார்த்தது
கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 3 பேர் கைது
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மூலப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் தனது நிலத்தை அளவீடு செய்ய கிராம நிர்வாக அதிகாரி மற்றும் நில அளவையரை அழைத்து வந்தார். ஆனால் நிலத்தை அளவீடு செய்ய அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி, அவருடைய வெங்கடாசலம் மற்றும் அருளப்பன் ஆகிய 3 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சாரதா கொடுத்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சுப்பிரமணி, அவருடைய தம்பி வெங்கடாசலம் மற்றும் அருளப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி