சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு மணிவிழுந்தான் பாலத்தில் இருந்து தேவியாக்குறிச்சி, ரயில்வே கேட், பாரதியார் கல்லூரி வழியாக மெயின் ரோடு வரை உள்ள ஊராட்சி சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி ரூ 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,
திமுக கிழக்கு மாவட்ட துணை செயலாளருமான கு. சின்னதுரை , வடக்கு ஒன்றியகழக செயலாளர் SPபாலமுருகன் , முன்னாள் பொறுப்பாளர் வரகூர் ஜெயபால், மணிவிழுந்தான் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,
தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.