டோக்கன்களுடன் ரூ. 63 ஆயிரம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

70பார்த்தது
டோக்கன்களுடன் ரூ. 63 ஆயிரம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் தேர்தல் நிலைக்குழு அலுவலர் ரவி தலைமையில் அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி குழுவினர் சோதனையிட்டனர். இதில் அந்த நபரிடம் ரூ. 63 ஆயிரம் ரொக்கம் மற்றும் 99 டோக்கன்களும் பிடித்தனர். இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரித்த போது, பூலாம்பட்டியை அடுத்த குப்பனூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 50) என்பதும், அவர் உரிய ஆவணம் இன்றி பணத்தை எடுத்து வந்ததுடன், அதற்குரிய காரணங்கள் கூறாததால் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த நிலைக்குழுவினர், அதை எடப்பாடி தாசில்தார் வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்தனர். டோக்கன்களுடன் பிடிபட்ட அந்த பணம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து போலீசாரும், பறக்கும் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி