ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் சுவாமி தெப்பத்தில் ஊர்வலம்

479பார்த்தது
சேலம் எடப்பாடி அருகே பெரிய ஏரியில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு
ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் சுவாமி தெப்பத்தில் ஊர்வலமாக சென்று அருள்பாலித்தார்.
ஏராளமான பொதுமக்கள் ஏரிக்கரையை சுற்றி நின்று சுவாமி தரிசனம்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 3வது சனிக்கிழமையில் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெருவிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகள் ஊர்வலமாக பெரிய ஏரியை தெப்பத்தில் அமர்ந்தபடி கடந்து செல்வது வழக்கம்.
அதன் அடிப்படையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை எடப்பாடியிலிருந்து வெள்ளூற்று பெருமாள் கோவிலை நோக்கி ஊர்வலமாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியிலுள்ள தண்ணீரில் தெப்பத்தேர் அமைத்து அதில் சுவாமிகள் அமர்ந்தபடி பரிசல் மூலம் கட்டி இழுத்து சென்றனர். அப்போது தெப்பத்தில் அமர்ந்திருந்த சுவாமியை மேளதாளங்கள் முழங்க கொண்டு சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்தேரில் அருள் பாலித்துத்து செல்லும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி