தேவூர் அருகே பெரியாண்டிச்சியம்மன் கோவில் திருவிழா

1595பார்த்தது
தேவூர் அருகே பெரியாண்டிச்சியம்மன் கோவில் திருவிழா
சேலம் மாவட்டம் தேவூர் அருகே சென்றாயனூர் தெற்கு தோட்டம் பகுதியில் பெரியாண்டிச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவையொட்டி சென்றாயனூர் கோவில் பதியில் இருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் பூக்கூடை எடுத்து ஊர்வலமாக பெரமாச்சிபாளையம் பகுதியில் உள்ள கம்பத்தையன் கோவிலுக்கு எடுத்து சென்றனர். 

பின்னர் சுடுகாட்டிற்கு சென்று மண்டை ஓடு எடுத்து மயான கொள்ளைக்காக பூசாரி கொண்டு வந்தார். பின்னர் மண்ணினால் செய்யப்பட்ட பெரியாண்டிச்சியம்மன் சிலையின் தலை பகுதியில் மண்டை ஓட்டை புதைத்து பூஜை செய்து கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி