சேலம் மாவட்டம் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரகாஷ் (வயது 30), இவர் மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளை வைத்துக்கொண்டு எடப்பாடியில் இருந்து ஜலகண்டாபுரம் நோக்கி சென்றுள்ளார். எடப்பாடி அடுத்த ஆவணியூர் ரிங் ரோடு பகுதியில் பிரகாஷ் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது.
இதில் படுகாயம் அடைந்த பிரகாசுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஈரோடு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி போலீசார் பிரகாஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெரிய மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்ெகட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.