எடப்பாடி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது

58பார்த்தது
எடப்பாடி பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரசிராமணி செட்டிப்பட்டி, ஓலப்பாளையம் பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தேவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் தேவூர் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் உள்ளிட்ட போலீசார் அரசிராமணி, ஓலப்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறதா என சோதனை செய்தனர். 

அப்போது அரசிராமணி மேற்கு ஓலப்பாளையம் பகுதியில் ரமேஷ் (வயது 39) என்பவர் கஞ்சா விற்பதை கண்டுபிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி