எடப்பாடியில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

63பார்த்தது
எடப்பாடியில் மின் சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்
மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் மின்சாரத்துறை சார்பில் எடப்பாடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. எடப்பாடி பஸ் நிலையம் அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை, எடப்பாடி கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 

இதில் கலந்து கொண்ட மின்வாரிய ஊழியர்கள், மின் சிக்கனத்தின் அவசியம் குறித்தும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். 

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளாண்டி வலசு மின்வாரிய அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இதில் மின்வாரியத்துறை அலுவலர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி