சேலம்: வீட்டில் படுத்து இருந்த முதியவர் மரணம்

65பார்த்தது
சேலம்: வீட்டில் படுத்து இருந்த முதியவர் மரணம்
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள செவந்தான் பட்டியை சேர்ந்தவர் மதியழகன் தேங்காய் வியாபாரி. அவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த மதியழகன் மாலை 6:30 மணிக்கு இறந்து கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மதியழகன் கழுத்து பகுதியில் சிறிய ரத்தகாயம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தடய அறிவியல் போலீசார் நடத்திய விசாரணையில் மதியழகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்திருக்கலாம் என தெரிவித்தனர். 

மேலும் இரு ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோய்க்கு ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் எறும்புகள் கடித்ததால் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மேலும் பிரேத பரிசோதனையில் தான் இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் கூறினர்.

தொடர்புடைய செய்தி