ஜலகண்டாபுரத்தில் ரூ. 21¾ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

78பார்த்தது
ஜலகண்டாபுரத்தில் ரூ. 21¾ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க உப கிளை ஜலகண்டாபுரத்தில் இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய், புதன்கிழமைகளில் இங்கு கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். 

இந்த ஏலத்தில் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பூலாம்பட்டி, சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, வனவாசி, பெருந்துறை, நரியம்பட்டி, அறியம்பட்டி, சின்னானூர், வாத்திப்பட்டி, ஊத்துக்குளி, காங்கேயம், முத்தூர், விஜயமங்கலம், வாழப்பாடி, அந்தியூர், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்துக்கு கொண்டு வருவார்கள். 

மொத்த மூட்டைகள் 266. நேற்று (ஜூன் 4) நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் பருப்பு முதல்தரம் கிலோ ரூ. 180.45 முதல் ரூ. 205.50 வரையும், 2-ம் தரம் கிலோ ரூ. 100.55 முதல் ரூ. 178.70 வரை விற்பனையானது. கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ. 21.69 லட்சத்திற்கு ஏலம் போனது என்று அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்தி