பூங்கா பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

80பார்த்தது
பூங்கா பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் மற்றும் பேளூர் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சிகள் துறையின் கீழ் ரூ. 1. 59 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ. ஆ. ப. , அவர்கள் இன்று (10. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும், உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அயோத்தியாப்பட்டிணம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 35 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ள முருகன் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மற்றும் மாரியம்மன் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி