வீரபாண்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் வேண்டுகோள்.

59பார்த்தது
வீரபாண்டி வட்டார விவசாயிகளுக்கு வேளாண் அலுவலர் வேண்டுகோள்.
சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டார விவசாயிகள்  தற்பொழுது பெய்த கோடை மழைக்கு உளுந்து , பச்சைப்பயறு , தட்டைப்பயறு   விதைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட பயறுகளில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்து பயன் பெறுவது குறித்து  வீரபாண்டி வேளாண்மை உதவி இயக்குநர் கிரிஜா மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர். அதில்
மானாவாரியில்   உளுந்து , பச்சைப்பயறு , தட்டைப்பயறு  சாகுபடிக்கு  12. 5 கிலோ தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து மற்றும் 12. 5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து இடவேண்டும். இறவை சாகுபடிக்கு   25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து 25 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச்சத்து  தரக்கூடிய உரங்களை இட வேண்டும். அடியுரமாக 25 கிலோ ஜிங்க் சல்பேட் இட வேண்டும்.
மேலும், மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்.
பாசன நிலையில் மண்ணில் 25 கிலோ துத்தநாக சல்பேட் ‌எக்டர் அளிக்கவும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நுன்உரக் கலவையை எக்டருக்கு 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும்.