சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்ட பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் 51 முட்டைகள் கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். இதில் ரூ.2.33 லட்சத்திற்கு ஏலம் போனது. முதல் தரம் ரூ.116.90 முதல் ரூ.145.20 வரையும், இரண்டாம் தரம் ரூ.90.20 முதல் ரூ.112.10 வரையும் விலை போனது.