சேலம் சிவதாபுரம் பெருமாள் கோவில் கரடு பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல், இவரது மனைவி சத்யா. இவர்களது வீட்டின் அருகே கடந்த மே மாதம் 31ஆம் தேதி இரவு 4 பேர் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். இதனை சத்யா தட்டிக் கேட்டார். அப்போது அங்கு வந்த சாமுவேலும் அந்த வாலிபர்களைத் தட்டிக் கேட்டார். அப்போது அந்த நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டதோடு சாமுவேல், சத்யா ஆகியோரைத் தாக்கினர்.
இதில் சாமுவேலுக்கு பல் உடைந்தது. இது பற்றிய புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இதில் தம்பதியை தாக்கியது இந்திரன், ராகுல், சூர்யா உள்பட நான்கு பேர் எனத் தெரியவந்தது. அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று இந்திரன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை தேடிவருகின்றனர்.